Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமல் வீரவங்சவின் மனைவி கைது!

பதிந்தவர்: ஈழப்பிரியா 22 February 2015

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்ச இன்று ஞாயிற்றுக்கிழமை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷசி வீரவங்ச, பொய்யான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டை 2010ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான ஷசி வீரவங்சவின் சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2010ஆம் ஆண்டு பெறப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டில் அடங்கியுள்ள தகவல்கள் பல முரண்பாடானதாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to விமல் வீரவங்சவின் மனைவி கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com