Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வடக்கின் முக்கிய நுழைவுப் பாதையில் அமைந்துள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இதற்கு முன்னர் பயணிகள் பதிவுகளை மேற்கொண்டு சோதனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், சில காலத்துக்கு முன் சோதனை நடவடிக்கைகள் பகுதியளவில் நிறுத்தப்பட்டு பதிவுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, இன்று முதல் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கைகள் முற்றுமுழுதாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

0 Responses to ஓமந்தையில் இராணுவச் சோதனைகள் நிறுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com