Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோரை மீட்டுத் தருமாறு கோரியும், நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட காணாமற்போன உறவுகளின் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், நீண்ட காலமாக எந்த தீர்வுகளும் இன்றி காணப்படும் காணாமற்போனார் மற்றும் சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்து, விரையில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்கிற கோரிக்கைகள் போராட்டக்காரர்களினால் முன்வைக்கப்பட்டன.

இதன்பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை அடைந்த போராட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதிக்கான மனுவை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடமும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கான மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடமும் கையளித்தனர்.

0 Responses to காணாமற்போன உறவுகளை மீட்டுத்தரக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com