Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை சில மாத காலம் தாமதப்படுத்துமாறு கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி சில நாட்களே ஆகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள மங்கள சமரவீர, வொஷிங்டனில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இறுதி மோதல் கால குற்றச்சாட்டுகளை கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த கால அவகாசம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவோம்: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com