Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அதிபர் மைத்ரி சிறிசேன தமது 4 நாள் அரசுமுறை இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று கொழும்பு திரும்பினார்.

இலங்கை அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த 15ம் திகதி இந்தியா வந்தார் சிறிசேன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், அணுசக்திப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அவருடன் இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வருகிறது.

சிறிசேன நேற்று பீகார் சென்று புத்த கயா புனித தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் அங்கிருந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து பின்னர் கொச்சி வழியாக கொழும்பு புறப்பட்டு சென்றுள்ளார். தமது இந்தியப் பயணம் மிக வெற்றி கரமாக முடிவடைந்து உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

0 Responses to அதிபர் சிறிசேன பயணத்தை முடித்து கொழும்பு புறப்பட்டார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com