Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை காலையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு, இன்று காலை இந்திய ஜனாதிபதி பிரணாப் முஹர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இராணுவ அணிவகுப்புடனான வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னரே, இந்தியப் பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றன. இதில், இரு நாட்டு வெளிநாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to மைத்திரி - மோடி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com