மேலை நாடுகளின் ஒவ்வொரு குண்டுகளிலும் ஐ.எஸ் வளர்கிறது..
நேற்று முன்தினம் வெளியான கூட்டுப்படைகளின் ஐ.எஸ் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை மேலை நாட்டுப்படைகள் 1600 ஐ.எஸ் ஜிகாதிகளை கொன்றொழித்துள்ளதாக மார்தட்டியிருந்தது.
நேற்று ஈராக்கில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் டென்மார்க்கிற்குச் சொந்தமான ஏழு எப் 16 ஜெட்விமானங்களும் 5000 பறப்புக்களை ஜோர்டானில் இருந்து ஈராக் நோக்கி பறந்து சாதனை இலக்கை தொட்டுள்ளதாக குவைத்தில் இருந்து மார்தட்டியுள்ளன.
மொத்தம் மூன்று இலட்சம் மணி நேரங்கள் ஆகாயத்தில் பறந்து, மணிக்கு 750 கி.மீ வேகத்தில் 225 மில்லியன் கி.மீ தூரம் ஜோர்டானையும் – ஈராக்கையும் சுற்றிச் சுழன்று பறந்து 208 போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு 158 தடவைகள் குண்டு வீசியுள்ளன டென்மார்க் விமானங்கள்.
சின்னஞ்சிறிய ஐம்பது இலட்சம் மக்கள் உள்ள டென்மார்க்கின் தாக்கம் இப்படியென்றால் அமெரிக்கா, பிரான்ஸ், ஜோர்டான் போன்ற நாடுகளின் பாதிப்பு எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
இத்தனை நடந்தும் ஐ.எஸ் பெரிய பாதிப்புக்கள் எதையும் சந்தித்தாக இல்லை ஏன்..? பின்வரும் ஐந்து கேள்விகள் தற்போது உலக சமுதாயத்தின் முன் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாக மேசையில் விழுந்துள்ளன.
01. இத்தனை குண்டுகளும் ஐ.எஸ் அமைப்பின் தலையில் விழுந்திருந்தால் அவர்கள் பூண்டோடு அல்லவா அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் எவ்வளவு அதிகமான குண்டுகளை வீசினார்களோ அதைவிட அதிகமாக ஐ.எஸ் வளர்ந்துள்ளது.. ஏன்..?
02. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெருந்தொகையாக ஐ.எஸ் ஜிகாதிகளுடன் சேர்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமிய இளையோர் ஈராக் – சிரிய போர்க்களம் நோக்கி கொட்டுப்படுகிறார்கள்.. ஏன்..?
03. இவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து நேற்று 150 கிறீத்தவர்களை கடத்திச் சென்றுள்ளார்கள் ஐ.எஸ் ஜிகாதிகள் தடுக்க முடியவில்லை.. ஏன்..?
04. இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகுவே எதிர்வரும் மார்ச் 17ம் திகதி நடக்கவுள்ள இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரக் காணொளியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பிக்கப் வாகனத்தில் வந்து எருசெலேம் செல்ல ஒரு இஸ்ரேலியரிடம் வழி கேட்பதாக காணொளி தயாரித்து வெளியிட்டுள்ளார்.. ஏன்..?
05. ஹமாஸ் அமைப்பையும், அல்குவைடாவையும் கைவிட்டு அவர் ஐ.எஸ்.சை தமது எதிரிகளாக்கி வாக்குக் கேட்க காரணம் என்ன..?
இத்தனைக்கும் காரணம் ஐ.எஸ் பெற்றுள்ள முக்கியத்துவம் தான்..
இந்த நிலையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாத விவகார கல்வியலாளர் உலகப்புகழ் பெற்ற பயங்கரவாத மதிப்பீட்டாளர், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் திருமதி லொரோற்றா நாபோலியோனியை நேற்று டென்மார்க் தொலைக்காட்சி சேவை சந்தித்து பேட்டி கண்டது..
யார் இந்த லொரோற்றா நாபோலியோனி..?
இறுதியாக இவரே இஸ்லாமிக் ஸ்ரேற் என்ற புதிய நூலை எழுதியுள்ளார், சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா – பிரிட்டனுக்கு ஆலோசகராக இருப்பவர்..
எழுத்தாளர், பொருளியலாளர், பயங்கரவாத ஆய்வாளர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு, இவருடைய பல நூல்கள் 18 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பேட்டியின்போது, லொரோற்றா நாபோலியோனி கூறிய கருத்துக்கள் ஒவ்வொரு மேலைத்தேய வெற்றிக் கனவு பலூன்களிலும் ஓட்டை போடும் விதமாகவே அமைந்திருந்தன.
அவர் சொன்ன கருத்துக்களின் சாராம்சத்தை சுருக்கமாக பின்வருமாறு வடிவமைத்துக்கொள்ள முடியும்..
01. ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக மேலை நாடுகள் வகுத்த வியூகம் அவர்கள் எதிர்பார்த்தமைக்கு மாறான தாக்கத்தையே களத்தில் ஏற்படுத்தியுள்ளது, ஐ.எஸ் மேலை நாடுகளின் குண்டு வீச்சுக்குப் பிறகுதான் வேகமாக வளர்ந்துள்ளது.
02. ஐ.எஸ்சின் மீது தாக்குதலை நடத்தும் போது அதனுடைய அடி நாதமான இதயம் எங்கே இருக்கிறதென கண்டுபிடிப்பதில் மேலை நாடுகள் தோல்வியடைந்துவிட்டன.
03. மேலை நாடுகள் ஐ.எஸ் மீதான கவனத்தை குவியப்படுத்தியதால் முன்னைய பயங்கரவாத அமைப்புக்களான அல்குவைடா, தலபான்கள் ஆகிய இரண்டும் இன்று ஏறத்தாழ ஐ.எஸ்சின் முன்னால் செல்லாக்காசுகளாகிவிட்டன, இப்படி ஒரு சதம்கூட செலவில்லாத வெற்றியை ஐ.எஸ் ஜிகாதிகளுக்கு தேடிக்கொடுத்த பெருமை மேலை நாடுகளையே சாரும்.
04. அல்குவைடா அமைப்பு ஒரு ஸ்ரேற் அல்ல அதுவும், தலபான்களும் ஆயுதக்குழுக்கள் மட்டுமே.. ஈராக்கில் தற்கொலைக் குண்டுகளை கட்டிச் சென்று வெடித்தால் வானத்தில் உள்ள 72 தேவதைகளில் நீங்களும் ஒரு தேவதையாக மிதப்பீர்கள் என்று அல்குவைடா சொன்னது, இளைஞர்களை கவரவில்லை, பரடைஸ் என்பது பெரிய ஏமாற்று வேலை என்பது இன்றைய இளையோருக்கு தெரியும்.
05. ஐ.எஸ் அமைப்பு தாம் அமைப்பது கலிபாவின் தேசம் என்று கூறுகிறது, இந்தத் தேசம் கலிபாவின் அழகான, அமைதியான ஆட்சி கொண்ட தேசம், இது உங்கள் தேசம், இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் சொந்தக்காரர் வாருங்கள் உங்களுக்கான அரசை அமைப்போம் என்கிறார்கள்.
06. உலகத்திலேயே மிக மோசமான.. மனிதர்களை உயிருடன் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தும் வன்முறைப் பயங்கர இயக்கமாக இருந்தாலும் இளைஞர்களை கவர்வது அவர்களுக்கான தேசம் என்ற கவர்ச்சிப் பிரச்சாரமே.
07. அதேநேரம் மேலை நாடுகளில் இருந்து ஆடம்பர வாழ்வு கிடைத்தாலும் அதை வெறுத்து இந்த அமைப்பிற்கு இளையோர் போக இன்னொரு காரணம் மேலை நாடுகள் இது உங்கள் நாடென்று எந்த வெளிநாட்டவரிடமும் கூறவில்லை, வெளிநாடுகளில் இரண்டாந்தர பிரஜைகளாக மட்டந்தட்டவே முயல்கின்றன, இவ்வாறு மட்டந்தட்டப்படுவதைவிட முதலாம்தர பிரஜைகளாக வாழும் கலிபாவின் தேசம் ஒன்றை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். அதற்காக உயிர்விட்டால் அதை பெருமையாகவும் கருதுகிறார்கள்.
08. இன்று ஐ.எஸ் அமைப்பில் சேரும் இளையோர் அல்குவைடா, தலபான்கள் போல அல்ல உலகத்தின் அத்தனை நவீன கருவிகளையும் இயக்கத் தெரிந்தவர்கள், ஐ.போன் உட்பட சமூக வலைத்தளங்களை சிறப்பாக பாவிக்கக் கூடியவர்கள்.
09. அதைவிட முக்கியம் அவர்கள் பரந்த ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார், சிரியாவுக்குள் மேலை நாடுகளின் படைகளை இறக்க வேண்டும் என்று ஐ.நாவில் பிரேரணை வந்தால் பாதுகாப்புச் சபையில் சீனா தனது வீட்டோவை பாவித்து தடுத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
10. இவ்வளவு நவீன விடயங்களை தெரிந்திருந்தும் மிக மோசமான படுகொலைகளை அவர்கள் ஏன் அரங்கேற்றுகிறார்கள் என்றால் காலனித்துவத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது, இன்றைய பொருளாதார கொள்கைகள், ஏற்றத்தாழ்வுகள் அடிமை வாழ்வு அத்தனைக்கும் காரணம் காலனித்துவமே, காலனித்துவ மதமான கிறீத்தவம், அதன் கொள்கைகளை ஏற்போரை ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்கள்.
11. ஐ.எஸ் ஜிகாதிகள் தமது இலக்கை அடைவார்களா என்ற கேள்விக்கு அவர் பதில் தரவில்லை காரணம் ஐ.எஸ் ஜிகாதிகள் வெல்வோம் என்று கருதுகிறார்கள். ஆனால் இதை மேலும் ஐந்து ஆண்டுகள் இதே போக்கில் விட்டால் எல்லாமே கட்டுமீறி போய்விடும்.
12. குண்டுகளை வீச வீச ஐ.எஸ் வளருமே அல்லாது அதன் தாக்கம் குறையாது, கூட்டுப்படைகளின் குண்டு வீச்சில் பொது மக்கள் கொல்லப்பட கொல்லப்பட மக்கள் ஐ.எஸ் பக்கமாகவே விழுவார்கள்.
13. இதை வெற்றி கொள்ள ஒரே வழி பேச்சுக்களை முன்னெடுப்பதுதான், ஈராக்கின் தென்புல முஸ்லீம் பகுதிகளை உள்ளடக்கி ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து மற்றைய வழிகள் யாவும் பண விரயமே என்றும் கூறியுள்ளார்.
தமது கௌரவத்தை விடுத்து ஐ.எஸ்சிற்கு ஓர் அந்தஸ்த்து கொடுத்து பேசும் மனோநிலைக்கு மேலை நாடுகள் வெகு தொலைவில் நிற்கின்றன, ஆகவே இந்த அவலம் இதே போக்கிலேயே தொடரும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
அலைகள் மத்திய கிழக்கு விவகாரப் பார்வைக்காக..
கி.செ.துரை

0 Responses to ஒபாமா நினைத்ததைவிட ஐ.எஸ் வேகமாக வளர்கிறது.. சர்வதேச ஆய்வாளர் கருத்து....