ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ’’ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 2016 தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என்று நம்பினோம். இன்னும் அதிகமான ஓட்டுகள் வாங்கி இருக்க வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது நேர்மறையான தேர்தல் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மிகப்பெரிய சுனாமி வீசியபோது 5 ஆயிரம் வாக்குகளை பெற்றது சாதாரண விஷயமல்ல.
ஒரு கட்சி வெற்றியை தக்கவைக்க பணம் கொடுத்தது. இன்னொரு கட்சி டெபாசிட்டை தக்க வைக்க பணம் கொடுத்தது. இருவருமே போட்டி போட்டு பணத்தை கொட்டினார்கள். இது நோட்டால் வாங்கப்பட்ட வெற்றி என்பதும் தெரியும்.
வெற்றி பெற்றதும் உண்மையான குறியீடு இல்லை. தோல்வி அடைந்தவர்கள் பெற்றதும் உண்மையான குறியீடு கிடையாது.
இந்த தொகுதியில் ஜெயலலிதா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். ஆனால் வளர்மதி 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்காக ஜெயலலிதாவை விட வளர்மதி செல்வாக்கு மிக்கவர் என்று சொல்ல முடியுமா?
ஊழலுக்கு எதிராக எல்லோரும் பேசும்போது ஒருவர்கூட தேர்தல் களத்தில் ஊழலுக்கு எதிராக போட்டியிட வரவில்லையே. ஆனால் நாங்கள் களத்தில் நின்றோம். நாங்கள் பெற்ற 5 ஆயிரம் வாக்குகள் ஊழலுக்கு எதிரான வாக்குகள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.
பா.ம.க. முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது. அப்படியானால் தேர்தலில் தோளோடு தோள் நின்று எதிர்த்து இருக்க வேண்டாமா?
களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு பா.ஜனதா போட்டியிலேயே இல்லை என்று கூறும் தார்மீக உரிமை திருமாவளவனுக்கு இல்லை.
எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் பிரிந்து நின்றால் சாதிக்க முடியாது என்பதையும் உணர்ந்து இருக்கிறோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாற்று சக்தியாக எங்கள் அணி உருவெடுக்கும்’’என்று தெரிவித்துள்ளார்..

0 Responses to களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு பாஜகவை விமர்சிக்கும் தார்மீக உரிமை திருமாவளவனுக்கு இல்லை: தமிழிசை