Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று டெல்லியில் தனித்து ஆட்சியமைக்கத் தயார் நிலையில் உள்ளது.

கடந்த 7ம் திகதி டெல்லியில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.இன்று காலை 8 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிலையிலேயே ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.பின்னர் அது 60 இடங்களாகி உள்ளது இப்போது ஆம் ஆத்மி 60 இடங்களில் வெற்றிப்பெற்று டெல்லியில் தனித்து ஆட்சி அமைக்கத் தயார் நிலையில் உள்ளது. பாஜக 9 இடங்களிலும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

ஆம் ஆத்மிக் கட்சி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்க, அர்விந்த் கெஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி தோல்வியைத் தழுவினார்.

0 Responses to தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com