வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள் பற்றி ஆராய்ந்து, அவற்றில் இராணுவத்தினர் பயன்படுத்தாத காணிகளை விடுவித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டிம்.எம்.சுவாமிநாதன் வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “இராணுவத்திடமுள்ள தனியார் காணிகளை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக வடக்குப் பகுதிக்கு செல்கிறேன். தற்போது இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளில் அவர்களால் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்ற காணிகள் எவை என நாங்கள் முதலில் ஆராய வேண்டும்.
அதன் பின்னர் இவற்றை இனங்கண்டு இவ்வாறான காணிகளை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்தியதும் கையளிக்கலாம். இது பாதுகாப்பை வழங்குவது என்ற இராணுவத்தின் அடிப்படை நடவடிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது.
இராணுவம் வடக்கில் பாதுகாப்பளிப்பதற்காகவே அங்குள்ளது. இராணுவம் தன்னை முகாம்களுக்குள் முடக்கிக்கொண்டு சிவில் நிர்வாகத்தை சிவில் நிர்வாகத்திடமும் பொலிஸாரிடமும் விட்டுவிட வேண்டும். நிர்வாக விடயங்களில் தலையிட வேண்டாம் என உயர் அதிகாரிகள் உரிய தரப்பினருக்கு உத்தரவை வழங்க வேண்டும். மக்களின் நாளாந்த வாழ்வில் அவர்கள் தலையிடாதவரை அவர்கள் இராணுவத்தை பிரச்சினையாக கருதமாட்டார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்திடமுள்ள தனியார் காணிகள் பற்றி ஆராய்வதற்காக டி.எம்.சுவாமிநாதன் வடக்கு விஜயம்!