Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக தேசிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தினை பணயம் வைக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயம். இதற்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறை மாற்றம் குறித்த விடயங்கள் உறுதியளித்தபடி நிறைவேற்றப்படும். தேர்தல்முறை மாற்றம் தொடர்பான அடிப்படை இணக்கப்பாட்டுக்கு கட்சிகள் யாவும் வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றை தோற்றுவிப்பது தொடர்பான ‘மார்ச் 12 கொள்கைத் திட்டம்’ தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள், சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அடிப்படை இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இக்குழுவின் ஊடாக தீர்மானமொன்றுக்கு வர முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக 100 நாள் வேலைத்திட்டத்தை பணயம் வைக்க முடியாது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com