இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.
தனி விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.
சுமார் இரு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் இந்தியத் தலைவர் என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வரவேற்பளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 03.00 மணியளவில் பாராளுமன்றத்திற்குச் செல்லும் இந்தியப் பிரதமர் அங்கு விசேட உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.
நாளை 14 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் புனிதத் தலமான ஸ்ரீமா போதியையும், அதனையடுத்து ருவன்வெலிசாயவையும் தரிசிக்கவுள்ளதுடன் இரு பிரதான விஹாரைகளினதும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெறவுள்ளார்.
பின்னர், தலை மன்னாருக்கு விஜயம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி மன்னார் தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கவுள்ளார். நாளை மதியம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ். பொதுநூலகத்தைப் பார்வையிடுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

0 Responses to நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்; ரணில் விக்ரமசிங்க நேரில் வரவேற்பு!