Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு 100 நாள் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முழுமையாக பங்கெடுக்கும் புதிய தேசிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அமைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானதும், கட்சியின் முக்கியஸ்தர்களோடு கலந்துரையாடி தற்போதுள்ள தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் அமைச்சர்களாக நியமிக்க உத்தேசித்துள்ளார்.

அதன்பிரகாரம், சுதந்திரக் கட்சியில் யார் யாருக்கெல்லாம் அமைச்சு பதவிகள் வழங்குவது என்பது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படுகின்றது. எதிர்வரும் வாரமளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்றும் கூறுப்படுகின்றது.

ஆனாலும், இதனை ஐக்கிய தேசியக் கட்சி ரசிக்கவில்லை என்று தெரிகின்றது. 100 நாட்களுக்கு ஆட்சி நடத்தும் ஆணையே மக்கள் தற்போதுள்ள தேசிய அரசாங்கத்திற்கு வழங்கினர். ஆகவே, ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய தேசிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அமைய வேண்டும்: ஐ.தே.க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com