தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு எதிரானது அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவு படுத்தவோ, வேறு இராட்சியங்களை உருவாக்கவோ முன்வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன, மத, சாதி வேறுபாடுகளை மறந்து அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதே புத்த பெருமானின் போதனையாகும்.
பௌத்த தர்மத்தினை கடைப்பிடிப்பவர்களின் சிறு தொகையினர் தங்களை தேசப்பற்றுள்ளவர்கள் என தெரிவித்து நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர். ஆனால், இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தாமல் பௌத்த தர்ம போதனைகளின் படி ஒழுகுவதே மைத்திரி ஆட்சியின் இலக்கு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தமை தொடர்பில் பல்வேறு போலியான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை ஒன்றுபட்ட ஒரு நாடாகும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்திலேயே ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியிருக்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிவினைவாதிகள் என்று சொல்வது அர்த்தமற்றது.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு எதிரானதல்ல: சஜித் பிரேமதாஸ