Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் அழைப்பை ஏற்றுச் சென்றுள்ள ஜனாதிபதி, பொதுநலவாய நாடுகளின் நிகழ்வில் நாளை திங்கட்கிழமை சிறப்புரை ஆற்றவுள்ளார்.

நேற்று காலை 09.50 மணியளவில் சாதாரண பயணிகள் விமானமொன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசின் சிறிய தூதுக்குழு பிரித்தானியாவுக்கான பயணத்தை ஆரம்பித்தது.

ஜனாதிபதியின் பிரித்தானியாவுக்கான நான்கு நாள் விஜயத்தில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்கவுள்ளதுடன், சர்வகட்சி பாராளுமன்ற குழுவுடனும் கலந்துரையாடல்கள மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

0 Responses to ஜனாதிபதி மைத்திரி பிரித்தானியா பயணம்; பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்துப் பேசுவார்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com