ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அறிவிக்கக்கோரி கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஏனைய அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் ஊர்வலங்களில் கலந்து கொள்வது இல்லையென தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இந்த தீர்மானத்தையும் மீறி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுமக உள்ளிட்ட மாகாண சபை- பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்தை மீறினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்னு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

0 Responses to மஹிந்த ஆதரவு கூட்டங்களில் கலந்து கொண்ட சு.க. உறுப்பினர்கள் மீது விசாரணை!