இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அரச ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மதித்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் சீனத் தூதுவர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்தினால் பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவை தீர்மானித்தது.
இதேவேளை, இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ள துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம், முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

0 Responses to வர்த்தக ஒப்பந்தங்களை மதித்து நடக்கவும்; இலங்கையிடம் சீனா வலியுறுத்தல்!