Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை பிற்பகலில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.

இந்தியப் பிரதமர் தன்னுடைய யாழ் விஜயத்தின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அதன்பின்னர், கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பயணாளிகளிடம் கையளித்தார். இந்த வைபவத்தின் போது, அவர் பாரம்பரிய முறைப்பாடி பால் பொங்கினார். அப்போது, வடக்கு மாகாண முதலமைச்சரும் உடனிருந்தார்.

இதனிடையே, யாழ் விஜயத்தின் போது கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திலும் இந்தியப் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ் விஜயத்தை முடித்துக் கொண்டு கொழும்பு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலையே இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு புதுடில்லி திரும்பினார்.

0 Responses to மோடியின் யாழ் விஜயம்: முதலமைச்சர் சி.வி.யை சந்தித்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com