இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னார்- மடுவிற்கான ரயில் சேவையை இன்று சனிக்கிழமை மதியம் அளவில் ஆரம்பித்து வைத்தார்.
இலங்கைக்கான இரண்டு நாள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். அத்தோடு, அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.
இந்த நிலையில், இன்று அனுராதபுரம் மகாபோதிக்கு சென்ற இந்தியப் பிரதமர் அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர், அங்கு இந்திய அரசாங்கத்தின் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ரயில் பாதையை பார்வையிட்டதுடன், தலைமன்னார்- மடுவிற்கான ரயில் சேவையையும் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதனிடையே, மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், உள்ளிட்டவர்கள் கையளித்துள்ளனர்.

0 Responses to மோடியின் வடக்கு மாகாண பயணம்: தலைமன்னார் - மடு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்!