முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படலாம் என்று தேசிய நிறைவேற்று சபையின் முக்கியஸ்தர் ஒருவரை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'அவன்ற் கார்டே' என்கிற குறித்த நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும் வரை, கோத்தபாய ராஜபக்ஷ உட்பட நான்கு பேர் வெளிநாடு செல்வதற்குத் காலி நீதிமன்றம் தடை ஏற்கனவே விதித்துள்ளது.
“காலியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலை விவகாரத்தை மூடிமறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றன. குறித்த நிறுவனம் அரசு போல் செயற்படுகிறது. இதில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இதன் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷ கைதாவதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. காரணம், அந்தளவுக்கு ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.'' என்று தேசிய நிறைவேற்று சபையின் குறித்த முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைதாகலாம்?