Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று முன் தினம் இங்கிலாந்து புறப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இன்று மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையைத் திறந்து வைத்தார்.

லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை அந்நாட்டு அரசு அமைத்திருந்தது.சிலையை இன்று அங்கு சென்ற அருண்ஜெட்லி திறந்து வைத்தார். முன்னதாக காந்தியின் கொள்கைகள் அடங்கிய பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன. அவை உறுப்பினர்கள் அனைவரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிலையை அருண் ஜெட்லி திறந்து வைத்தார்.

உலகத்தில் உள்ள முக்கிய தலைவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

0 Responses to இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் முழு உயர சிலையைத் திறந்து வைத்தார் ஜெட்லி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com