Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்மோகன் சிங் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் வந்ததை அடுத்து, இன்று அவசரமாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்க ஏலம் விடப்பட்டதால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்கிற குற்றச்சாட்டில், அப்போது நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும் குற்ற வழக்கில் சேர்க்கப்பட்டார்.நிலக்கரி சுரங்க ஏல முறைகேடுத் தொடர்பாக 25 க்கும் மேற்பட்ட துணை வழக்குகள் பதிவான நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் அடுத்த மாதம் 8ம் திகதி மன்மோகன் சிங், ஹிண்டல்கோ நிறுவன அதிகாரிகள், மன்மோகன் சிங் அலுவலகத்தில் உதவியாக இருந்த அதிகாரிகள் என்று, அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. இதுக்குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது. மன்மோகன் சிங் வீட்டை நோக்கி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் நடைபயணம் மேற்கொண்டு சென்றனர் என்பதுக் குறிபிடத் தக்கது.

0 Responses to காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடுகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com