Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் எக்சத் சேனாரத்ன திருமண வயதை அடையாத இளம் யுவதியை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி, யுவதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய, வழக்கு விசாரணைகளை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இளம் யுவதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, யுவதி தனது பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என கூறினார்.

அதேவேளை 2014ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் மனுவை தாக்கல் செய்ய ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் நீதிபதி வினவினார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காரணத்தினால், முறைப்பாடு செய்ய முடியாமல் போனதாக சட்டத்தரணிகள் பதிலளித்தனர்.

யுவதி ஒருவர் கடத்தப்படும் சந்தர்ப்பத்தில் முறைப்பாடு செய்வது வழமையான செயற்பாடு எனவும் தாமதமாகி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், இதன் பின்னணியில் பிரச்சினைகள் இருப்பதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to பெற்றோருடன் செல்ல மறுக்கும் ராஜிதவின் மகனுடன் இருக்கும் யுவதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com