இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினை சற்றுமுன்னர் (ஏப்ரல் 28, 2015) நிறைவேற்றியிருக்கின்றது.
19வது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 215 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சரத் வீரசேகர வாக்களித்தார். பஷில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, ஜனக பண்டார தென்னக்கொன் உள்ளிட்ட 7 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கவில்லை. ஒருவர் வாக்களிப்பைத் தவிர்த்தார். இந்த நிலையில் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில், 214 மேலதிக வாக்குகளினால் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்து அரசாங்கத்தினால் 1978ஆம் ஆண்டு செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அமைவாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
கடந்த 37 வருடங்களாக சர்வ அதிகாரமும் நிறைந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே இலங்கையை ஆட்சி செய்து வந்திருக்கின்றது. சில தடவைகள் அரசாங்கங்கள் மாறினாலும், நிறைவேற்று அதிகாரத்துக்கு முன்னால் அவை அஞ்சி நடக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. கிட்டத்தட்ட நிறைவேற்று அதிகாரத்துக்கு முன் பாராளுமன்றமும், நீதிமன்றமும் செயலற்றுப் போயிருந்தன.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்குமானது. கடந்த காலங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளோ, அரசாங்கங்களோ அவற்றை செய்திருக்கவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வரலாற்றில் தன்னுடைய பெயரைப் பதிவு செய்திருக்கின்றார
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றுமுழுதாக ஒழிக்கப்படாத போதிலும், அதன் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் பகிரப்பட்டிருப்பதனூடு முக்கிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இதனூடு நீதிமன்றம், ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறிப்பிட்டளவில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மக்களின் ஜனநாயகம் மக்களுக்கானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், கடந்த காலங்களில் அது குறிப்பிட்ட ஒருவருக்கு அதீத அதிகாரங்களை அளித்து ஜனநாயக மரபுகளைப் புறந்தள்ளியிருந்தது. ஜனநாயக மரபு மீதான நம்பிக்கையை 19வது திருத்த சட்டத்தின் நிறைவேற்றம் ஓரளவுக்கு கொடுத்திருக்கின்றது. இது, நல் மாற்றங்களை எதிர்காலத்திலும் வழங்க வேண்டும்.

0 Responses to 19வது திருத்தம் நிறைவேற்றம்; நல் மாற்றத்தின் அறிகுறி!