Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 07.00 மணி) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 215 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 7 பேர் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாதவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனக பண்டார தென்னக்கோன், பஷில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சரத் வீரசேகர எதிராக வாக்களித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுறுத்தி அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு பகிரும் முகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் சமர்ப்பித்த 19வது திருத்தச் சட்டமூலம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நிறைவேறியுள்ளது.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், 37 வருடங்களின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டுள்ளது.

0 Responses to 19வது திருத்தம் நிறைவேற்றம்; 37 வருடங்களின் பின் நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com