Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலநறுவையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும், நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும்: மைத்திரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com