19வது திருத்தச் சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு அமைவானது என்று உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியனத்தில் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
ஆனாலும், சில சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
19வது அரசியலமைப்பின் சில சரத்துக்கள் தவிர்த்த பகுதிகளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமான சரத்துக்களை நீக்கிவிட்டு சட்டமூலத்தை நிறைவேற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to 19வது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: உயர்நீதிமன்றம்