Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏமனிலிருந்து முதற்கட்டமாக இந்தியர்கள் 2 ஆயிரம் பேர் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

நேற்று இரவு இவர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில் இவர்களுக்கு முதற்கட்டமாக தங்கும் இடமும், உணவும் கேரள அரசு சார்பாக அளிக்கப்பட்டது.

அங்கு வந்து இறங்கிய இந்தியர்கள் பின்பு அவரவர் சொந்த மாநிலங்களில் உள்ள ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழர்கள் 40 பேர் முதற்கட்டமாக கொச்சி வந்திறங்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வர தமிழக அரசு பேருந்து வசதிகள் மற்றும் உணவு வசதிகளை செய்துள்ளது.

மீதம் உள்ள இந்தியர்கள் அனைவரும் இப்படி படிப்படியாக அழைத்துவர உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அங்குள்ள இரண்டு இந்திய விமானங்களுக்கு ஏமன் அரசு அனுமதி அளித்தவுடன் அவர்கள் விமானம் மூலம் புறப்படுவார்கள் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to ஏமனிலிருந்து முதற்கட்டமாக 2000 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com