ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரம் முழுவதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கைக்கு வந்தது.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கெஜ்ரிவால் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் அவர் இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு சென்றிருந்த நிலையில் அவரது கட்சிக்குள் உட்பூசல் தலை விரித்தாடி, மூத்த உறுப்பினர்களான பிரஷாந்த் பூஷன் யோகேந்திரன் உள்ளிட்டவர்கள் கட்சிக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் உடல்நலம் தேறி கெஜ்ரிவால் டெல்லி வந்த நிலையில், அரசு வேலைகளோடு, கட்சிப் பூசலையும் சரி செய்யும் முயற்சிகளில் இறங்கினார்.இதையடுத்து ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர்கள் அனைவரையும் மாற்றிவிட்டு தமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களை கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாற்றி நியமித்துள்ளார்.இதில் பிரஷாந்த் பூஷன், மற்றும் யோகேந்திரனும் நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்களில் அடக்கம் என்பதுக் குறிப்பிடத் தக்கது. கட்சிக்குள் கெஜ்ரிவாலுக்கு முக்கியமானவர்களுக்கு மட்டும் செய்தித் தொடர்பாளர் பணிகள் வழங்கப்பட்டு உள்ளதால், கட்சி அதிகாரம் முழுக்க இப்போது கெஜ்ரிவாலின் கைக்கு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரம் முழுவதும் கெஜ்ரிவால் கையில்!