Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுமார் 132 பயணிகளுடன் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் வர்த்தக மின்பிடிக் கப்பலான ட்ராவ்லெர் (Trawler) அண்மையில் நீரில் மூழ்கியதில் குறைந்தது 54 பொது மக்கள் கொல்லப் பட்டதும் 15 பேர் வரை காணாமற் போயுள்ளமையும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கே இருந்து அதி தூரத்தில் அமைந்துள்ள குறித்த கப்பல் மூழ்கிய பகுதியில் மிகக் குளிரான நீருக்கு மத்தியிலும் 60 இற்கும் அதிகமானவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

இப்படகில் பயணம் செய்த மக்களில் 78 பேர் ரஷ்யர்கள் மற்றும் 54 பேர் மியான்மார், உக்ரைன், லித்துவானியா மற்றும் வனௌட்டு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது காணாமற் போனர் 15 பேரையும் தேடும் பணியில் 20 மீன்பிடிப் படகுகள் ஈடுபட்டு வருகின்றன. குறித்த ட்ராவ்லெரின் விபத்துக்கான உறுதியான காரணம் என்னவென இதுவரை தெரியவில்லை. மிகக் குளிரான கடலில் மிதந்து வந்த பனிக்கட்டி ஏதும் கப்பலுடன் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அல்லது 100 டன் எடை கொண்ட இழுவலையைப் பயன்படுத்தியதால் கப்பல் ஆட்டம் கண்டு கடலில் மூழ்கியிருக்கலாம் எனவும் இரு காரணங்கள் கூறப்படுகின்றன.

0 Responses to ரஷ்ய வர்த்தக மீன்பிடிக் கப்பலான 'டிராவ்லெர்' கடலில் மூழ்கியது: 54 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com