Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்த ஆண்டுக்குள் பத்து கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கு என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

பெங்களூருவில் தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகள், மற்றும் முதல்வர்கள், அமைச்சர்கள் அடங்கிய செயற்குழு மாநாடு நேற்று தொடங்கி உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு வித ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் பாஜகவை வளர்ப்பது எப்படி என்றும், முக்கியமாக தென் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கை மேம்படுத்த வேண்டும் என்பதும்தான் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

தற்போது 80 கோடியாக உழல பாஜகவின் உறிப்பினர்களை ஒரு கோடி என்று உயர்த்துவதுதான் பாஜகவின் தற்போதைய இலக்கு என்று அமித் ஷா கூறியுள்ளார். மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாஜகவில் பத்து கோடி உறுப்பினர்களை இந்த ஆண்டு சேர்க்க இலக்கு: அமித் ஷா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com