Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் இலவச வைஃபை இணையத் தள சேவை தொடங்கிவிடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஊழல், லஞ்சம் இல்லாத அரசாக டெல்லியை ஆட்சி செய்ய வேண்டும் என்பது அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் வாக்குறுதி. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க இலவச வைஃபை இணையதள சேவைத் திட்டம் மிகவும் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அதே சமயம் அரசுக்கும் லஞ்சம், ஊழல் செய்பவர்களை உடனடியாக அடையாளம் காண வசதியாகவும் இருக்கும் என்பதற்காகவே இந்த இலவச வைஃபை திட்டம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும் இந்த சேவைக்கு முதற்கட்டமாக 700 வைஃபை இணையதள சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் இலவச வை-பை சேவை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com