யாழ்ப்பாணத்தில் தூய குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தலைப்பில் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.
இன்று முற்பகல் 10.00 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் போராட்டம் ஆரம்பமாகி அங்கிருந்து ஊர்வலமாக யாழ். செயலகத்தை அடைந்தது. அங்கு போராட்டக்காரர்கள், யாழ். அரச அதிபர், ஆளுநர் மற்றும் முதல்வருக்கான மனுக்களைக் கையளித்தனர்.
இதேவேளை, எண்ணெய் கழிவுகள் கலந்துள்ள சுன்னாகம் உள்ளிட்ட பகுதி நிலத்தடி நீரினை பருகலாமா, பருகக்கூடாதா? என்று அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப்போவதாக அமைதிப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த 5 இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Responses to ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ போராட்டம் நல்லூர் ஆலய முன்றலில் முன்னெடுப்பு!