இலங்கையின் சிரேஷ்ட ஒலி- ஒளிபரப்பாளரும், நடிகையுமான கமலினி செல்வராஜன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். சில காலமாக அவர் சுகவீனமுற்றிருந்தார்.
கமலினி செல்வராஜன், ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ்.ராமதாசின் 'எதிர்பாராதது', எஸ்.எஸ்.கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அவர், ரூபவாஹினியிலும், ஐ.ரி.என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வந்தார்.
இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென்.அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென்.கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது சில்லையூர் செல்வராசனை திருமணம் புரிந்து கொண்டார்.
கமலினி செல்வராஜன், இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 'ஆதர கதாவ" என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார்.
(உள்ளடக்கம்- வீரகேசரி)

0 Responses to இலங்கையின் சிரேஷ்ட ஒலி - ஒளிபரப்பாளரும், கலைஞருமான கமலினி செல்வராஜன் மறைவு!