Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிகிரியா குகையோவியத்தில் கையெழுத்திட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சிகிரியா குகையொவியமொன்றின் மீது கையெழுத்திட்டிருந்தார். இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தனது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த யுவதிக்கு பொது அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிகிரியா குகையோவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com