Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளுக்கான 8 நாட்கள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.

முதற்கட்டமாக நாளை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருப்பார். அந்நாட்டு அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அவர் பின்னர் செய்தியாளர் சந்திப்பிலும் கலந்து கொள்கிறார். பிரான்ஸில் தங்கியிருக்கும் போது, யுனெஸ்கோ தலைமையக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் அவர் சனிக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க லூட்ஸ் நகருக்கு செல்கிறார். அங்கு ஏர்பஸ் நிறுவன தலைமையகத்தை பார்வையிடுகிறார். ஞாயிற்றுக் கிழமை லில்லி நகரில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவிடத்துக்குச் செல்கிறார். இந்த நினைவிடம் இந்தியப் போர் வீரர்களின் தியாகங்களை பின்னணியாக கொண்டதாகும்.

பின்னர் பிரான்ஸிலிருந்து ஜேர்மனிக்கு புறப்படும் மோடி பின்னர் மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடா போன்ற மேற்குலக நாடுகளுக்கும் செல்லவிருக்கிறார்.

பிரான்ஸ் சுற்றுப் பயணத்தின் போது விண்வெளி, சுற்றுலா, தீவிரவாத தடுப்பு பயிற்சி, இந்தியாவுக்கான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதோடு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு துறைகளில் முதலீடு செய்ய இந்தியா வருமாறும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு மோடி அழைப்பு விடுக்கவுள்ளார்.

0 Responses to நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் : நாளை பிரான்ஸிற்கு புறப்படுகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com