காலம் தவறிப் பெய்த மழை, வெள்ளத்தால் பயிர்ச்சேதமடைந்து பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நஷ்ட ஈடுத் தொகையை 50% வீதமாக அதிகரித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதோடு தமது பயிர்ச்செய்கையின் 33% வீதம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இந்நஷ்ட ஈடுத் தொகையை பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 50% வீதத்திற்கு மேல் பாதிப்படைந்திருந்தாலே இந்நஷ்ட ஈடுத் தொகை கிடைக்கப்பெறும் எனும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இப்புதிய அறிவிப்புக்கள், Mudra (Micro Units Development and Refinance Agency) எனும் வங்கியின் திறப்பு விழாவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலம் தவறிப் பெய்த கடும் மழையால் விளைச்சலுக்காக காத்திருந்த தமது பயிர்ச்செய்கை அனைத்தும் அழிவடைந்த சோகத்தில் கடந்த வாரம் மாத்திரம் வட இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தியாவில் கடந்த ஒரு நூற்றாண்டில், கடந்த மார்ச் மாதம் தான் மிகவும் ஈரப்பதம் கொண்ட மாதமாக இருந்தது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழையினால், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்புக்கள் அழிவடைந்தன.

0 Responses to விவசாயிகளின் தற்கொலை எதிரொலி : நஷ்ட ஈடுத் தொகையை 50% வீதமாக அதிகரித்தார் மோடி!