நியூயோர்க்கில் மண முறிவு பெறுவதற்காகத் தனிப்பட்ட முறையில் தனது கணவரைத் தொடர்பு கொள்ள முயன்ற அமெரிக்கப் பெண்மணி ஒருவருக்கு அது முடியாததால் அவர் ஃபேஸ்புக் வாயிலாக மணவுறிவுப் பத்திரங்களை சமர்ப்பித்து விவாகரத்துப் பெற மன்ஹட்டானிலுள்ள சுப்ரீம் நீதிமன்றம் ஒன்று கடந்த வாரம் அனுமதி அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
26 வயதாகும் எல்லனோரா பைடோ என்ற மருத்துவத் தாதி ஒருவருக்கே இந்த ஃபேஸ்புக் மணமுறிவு சலுகை அளிக்கப் பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இவருக்கும் விக்டர் சேனா ப்ளூட் ட்ஸ்ராக்கு என்பவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆனால் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். ஆனால் எல்லனோராவுக்கோ முறைப் படி விவாகரத்து பெறுவதற்கு அவரது கணவரான விக்டரின் தபால் கந்தோர் வாயிலான நிஜமான முகவரியோ அல்லது அவரது செல்போன் இலக்கமோ அல்லது அவரது வாகனத்தின் திணைக்களப் பதிவோ இல்லாத காரணத்தால் ஃபேஸ்புக் வாயிலாக இந்த புரட்சி மணமுறிவுக்கு அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன் மூலம் இவரும் இவரது கணவரும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொண்டதுடன் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து ஃபேஸ்புக்கானது பொதுமக்களை இணைக்கும் பாலம் என்ற மட்டில் நின்று விடாது பிரிக்கும் பாலமாகவும் செயற்படக் கூடியது என்ற பெயரும் அதற்குக் கிடைத்துள்ளது.

0 Responses to முதன் முறையாக ஃபேஸ்புக் வாயிலாக மணவுறிவு பெற அமெரிக்கப் பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி