ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இதுவரைக்கும் கெடுபிடிகள் இல்லை. ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை - கருமங்களை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. காலஅவகாசம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் குழுவினருடனான நேற்றைய (புதன்கிழமை) சந்திப்பின் போதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம், சம்பூர் மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். மக்கள் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு நிறுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். காணாமற்போனோர் மற்றும் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பில் அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

0 Responses to மைத்திரி அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்