Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

பதிந்தவர்: தம்பியன் 28 April 2015

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த நில நடுக்கங்களில் நிலை குலைந்து கிடக்கும் நேபாளத்தில் இன்று அதிகாலை குறைந்தது இரு முறை மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து கடுமையான நில நடுக்கங்கள் ஏற்பட்டது. காத்மாண்டு பழமையான நகரம் என்பதால் அங்குள்ள 4 பழமையான கோயில்கள், கட்டிடங்கள் என்று இடிந்து விழுந்ததில் காத்மாண்டுவில் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், புதையுண்ட யாரும் இனி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.உடல்கள் அழுகிய நிலையில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்களுக்கு தூய்மையான குடிநீர், உணவு, உறைவிடம் என்று பல வசதிகளை அந்நாட்டு அரசு செய்துக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். மீட்புப் பணிகளில் அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com