பச்சிலைப்பள்ளி, மாசார் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முருகேசு சந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய ஜனாதிபதியின் 100நாள் வேலைத்திட்டம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான ஏற்பாடுகளோ, பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையோ, படையினர் வசமுள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையோ அந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக, சரத் பொன்சேகாவிற்கு பதவி உயர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் தென்பகுதி அரசியல்வாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்குமே அது வழிவகுத்தது. இந்நிலையில் இந்த ஆட்சிமுறைமை இவ்வாறுதான் அமையும் என்ற எதிர்வு கூறல் இருந்தபோதும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினரே ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.
ஆனால், இன்று அதிருப்தியில் இருக்கின்ற மக்களோடு இணைந்து அரசாங்கத்தின மீது அதிருப்பதிகளை வெளியிட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கொள்ள முடியாது. ஆகவே இதில் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள் ஏமாற்றியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர். அவர்கள் இளைத்த இந்த வாரலற்றுத் தவறுக்கு அவர்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
இதனூடாக, தமிழ் மக்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டுள்ளார்கள் அதாவது சிங்களத் தலைமைகளை மாற்றுவதனூடாக தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. மாறாக காலம்காலமாக தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தமது தனிப்பட்ட நலன்களைக் கடந்து தமிழ் மக்களுக்காக உண்மையாக உழைக்கின்றவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் தலைமைகளை மாற்றுவதே விமோசனத்துக்கான வழி: முருகேசு சந்திரகுமார்