சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்காத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல் முறை மாற்ற முன்மொழிவுகள் தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்காத வகையிலான புதிய முறைமையொன்றுக்கே தம்மால் ஆதரவளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமைய வேண்டும்: ரிஷாட் பதியுதீன்