Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறும்.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பித்தது. இன்றைய அமர்வு மாலை 06.00 மணி வரை தொடரும், இதன்போது 19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் நடைபெறும். ஏற்கனவே மூன்று தடவைகள் 19வது திருத்தத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு 19வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 19வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் இதனை எதிர்க்கப் போவதாகத் தெரிகிறது.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 144 பேரும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 14 பேரும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 பேரும் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

0 Responses to 19வது திருத்தம் இன்று; வாக்கெடுப்பு நாளை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com