Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்!

பதிந்தவர்: தம்பியன் 09 April 2015

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னயில் நேற்று காலமானார். «எல்லோரும் கொண்டாடுவோம்», «நட்ட நடு கடல் மீது», «உன் மதமா என் மதமா» உள்ளிட்ட பல பின்னணிப் பாடல்களுக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனிபா.

இவர் பாடிய பாடல் «இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை» எனும் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதுவரை ஐயாயிரத்துக்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகளில் பாடியுள்ள நகூர் ஹனிபா, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா திரைப்படங்களில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

ஆரம்ப காலம் முதல் தி.மு.க.வில் இருந்த அவர், 1957-ம் ஆண்டு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.க. சார்பில் நடந்த போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹ்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த நாகூர் ஹனிபாவின் இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிபா ஆகும். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் இவரும் நாகூர் ஹனிபா என அழைக்கப்படலானார்.

நாகூர் ஹனிபா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தி.மு.க. கொடிகள் அனைத்தும் 3 நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நாகூர் ஹனிபாவுக்கு வயது 96 என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com