Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 81.

 நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் 20ம் நூற்றாண்டில் தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்த ஜெயகாந்தன் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பலவற்றில் கால் பதித்தவர்.

இவருடைய ‘வாழ்க்கை அழைக்கிறது’, ‘கைவிலங்கு’, ‘யாருக்காக அழுதான்?’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கங்கை எங்கே போகிறாள்?’ போன்ற நாவல்கள் மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. இவருடைய «உன்னைப் போல் ஒருவன்» நாவலை மையமாக கொண்டு வெளிவந்த «உன்னைப் போல் ஒருவன்» திரைப்படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருது கிடைத்தது.

அதோடு பத்ம பூஷன் விருது, சாகித்திய அகடமி விருது என்பவற்றையும் பெற்றவர் ஜெயகாந்தன் ஆவார். இவருடைய மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஓர் மாபெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

0 Responses to தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com