Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் இன்னொரு கருப்பின இளைஞர் போலிசாரால் வேண்டுமென்றே ஓடும் போது 5 முறை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தெளிவாக CCTV  வீடியோவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருக்கும் பதற்றத்தை இன்னமும் அதிகரித்துள்ளது.

சிசிடிவி பதிவு மூலம் இது திட்டமிடப் பட்ட துப்பாக்கிச் சூடு என்பது உறுதியானதால் குறித்த மைக்கேல் ஸ்லகெர் என்ற போலிசாரைக் கைது செய்து உயரதிகாரிகள் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப் பட்ட வால்டர் ஸ்காட் என்ற 50 வயது கருப்பின இளைஞர் தெற்கு கரோலினாவின் வடக்கு சார்லஸ்டன் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளுக்குத் தந்தையாவார்.

இதேவேளை அமெரிக்காவில் வங்கிக் கொள்ளை முயற்சிகளின் போது இரு இந்தியர்கள் கொல்லப் பட்ட சம்பவமும் அங்கு வாழும் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹெவன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ஹெல்மட் அணிந்து வந்து அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற இருவர் அவர்களைத் தடுக்க முயன்ற 39 வயதாகும் சஞ்சய் பட்டேல் என்ற இந்தியரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்ட அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மனைவி கர்ப்பிணியாக முதல் பிரசவத்தை எதிர் நோக்கி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவமும் CCTV கமெராவில் பதிவாகி இருப்பதால் அதன் மூலம் தற்போது குற்றவளிகளைப் போலிசார் தேடி வருகின்றனர்.

2 ஆவது சம்பவமாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராஜேஸ் என்ற இந்தியரும் கொள்ளை முயற்சி ஒன்றில் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனையும் சுயமாக உறுதிப் படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலிசாரால் சுட்டுக் கொலை!:தொடரும் பதற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com