Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஜயந்த கெட்டகொட, சரத் வீரசேகர, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதயன் கம்பன்பில உள்ளிட்ட 26 பேருக்கே இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 26 பேரையும் எதிர்வரும் 08ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவே மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வருவதையடுத்து (கடந்த புதன்கிழமை), ஆணைக்குழுவின் கட்டடம் இருக்கின்ற பிரதேசத்தை அண்மித்த பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்கு பொலிஸாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டது.

ஆயினும், தடை உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த 26 பேரும் கலந்து கொண்டிருந்தனர். இதனையடுத்தே, நீதிமன்றத்தின் தடையுத்தரவை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு; ஐ.ம.சு.கூ.வின் 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com