Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக 100 கோடி ரூபாய்களைக் கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணி அத்துல பிரியதர்ஷன டி சில்வாவின் ஊடாக இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து இருப்பதாக கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டிருந்தார்.

இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இதன்மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் மனவேதனை அடைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மங்களவுக்கு எதிராக 100 கோடி ரூபாய் கோரி மஹிந்த வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com