பேலஸ் பார்க் என்ற அந்த ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கக் குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் வந்த இரண்டு பேர், தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்துவதற்கு முன்பாக தாங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த ஹோட்டலின் தோட்டத்தில், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
புதன் கிழமையன்று மாலையில் துவங்கிய இந்தத் தாக்குதல் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு நீடித்தது. ஆப்கன் காவல்துறையினர் அந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டு, ஹோட்டலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததையடுத்து, இந்தத் தாக்குதல் முடிவுக்கு வந்தது.
இந்தியர்கள் சிலரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக ஆஃப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அமர் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் ஒவ்வொரு அறையாகச் சென்று, வெளிநாட்டவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை
பிபிசி செய்திகள்

0 Responses to காபூலில் தாக்குதல்: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி