Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கிய 2 ஆவது பாரிய பூகம்பத்தின் பின் நிவாரண நடவடிக்கைக்காக அங்கு சென்ற அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று காணாமற் போயிருப்பதாகவும் தற்போது அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

8 பேர் அடங்கிய மாரினே ஹெலிகாப்டர் சாரிகோட் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு மாயம் ஆகியுள்ளது.

ஏற்கனவே மீட்பு நடவடிக்கைக்காக நேபாளத்தில் சுமார் 300 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது காணாமற் போன ஹெலிகாப்டரை மற்றைய ஹெலிகாப்டர்கள் மூலம் தேடப்பட்டு வரும் நடவடிக்கை முடுக்கி விடப் பட்டுள்ளது. ஆயினும் சற்று முன்னர் வரை நேபாளத்தில் காணாமற் போன அமெரிக்கக் ஹெலிகாப்டர் பற்றிய எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை என்றே அறிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை இன்று புதன்கிழமை ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக USGS அறிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் படவில்லை. மேலும் பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் உடனடித் தகவல் இல்லை.

2011 இல் ஜப்பானின் ஃபுக்குஷிமா பகுதிகளுக்கு அண்மையில் தாக்கியிருந்த கடும் நிலநடுக்கம் காரணமாக 8000 பேர் கொல்லப் பட்டும் ஃபுக்குஷிமா அணு உலையில் கதிர்வீச்சு அபாயமும் தோன்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க ஹெலிகாப்டர் மாயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com